குன்னுார் அங்கன்வாடி ஆசிரியருக்கு விருது வழங்கி கௌரவிப்பு

3 February 2021, 7:23 pm
Quick Share

நீலகிரி: கொரோனா காலத்தில் நாள்தோறும் 12 கி.மீ., தொலைவு நடந்து சென்று ஊட்டச்சத்து உணவுகளை வழங்கிய குன்னுார் அங்கன்வாடி ஆசிரியருக்கு மத்திய அரசின் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு உள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே காட்டேரி பகுதியை சேர்ந்த அங்கன்வாடி ஆசிரியர் வெண்ணிலா (40) . கொரோனா ஊரடங்கு காலத்தில், பழங்குடியின கிராமங்களான புதுக்காடு, கீழ் சிங்காரா பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களை வழங்கி வந்தார். மக்களுக்கு நாள்தோறும் 12 கி.மீ., தொலைவு நடந்து சென்று ஊட்டச்சத்து உணவுளை வழங்கி வந்துள்ளார். கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது.

அதில் தமிழக அளவில் இவரின் சேவையை பாராட்டி, தேசிய மகளிர் ஆணையம் சார்பில்,”கோவிட் உமன் வாரியர்ஸ் – ரியல் ஹீரோயிஸ்” என்ற விருதினை டெல்லியில் வழங்கியது. இந்த விருதினை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா வழங்கினார். எந்த எதிர்பார்ப்பும இல்லாமல் பழங்குடியின மக்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு வனப்பகுதி வழியாக சென்று தொடர்ந்து சேவை செய்வதே விருப்பம் என தெரிவித்துள்ளார். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Views: - 17

0

0