கொரோனா குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லை: நாராயணசாமி வேதனை

17 August 2020, 8:24 pm
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் செய்வாய்கிழமைகளில் பொதுமுடக்கம் துவங்கப்படுவதாகவும், மக்கள் ஒத்துழைக்கவில்லை எனில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றப்படும் என நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களில் இறப்பு விகிதத்தை குறைக்கும் நடவடிக்கையாக கட்டாயம் 10 நாட்கள் மருத்துவமனையில் கண்காணித்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது என்றும், புதுச்சேரியில் நோய் தொற்று அதிகரிப்பதற்கு மக்களுக்கு நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்றும், அரசின் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என வேதனை தெரிவித்த நாராயணசாமி,

நோய் தொற்றை குறைக்க நாளை முதல் ஒவ்வொரு செய்வாய்கிழமைகளிலும் 24 மணி நேர பொது முடக்கம் செயல்படத்தொடங்கும் என்றும், இதை பரிட்சாத்திய முறையில் பார்ப்போம் மக்கள் ஒத்துழைப்பு இல்லையெனில் இதை இனி ஞாயிற்றுக்கிழமையன்று மாற்றப்படும் என நாராயணசாமி எச்சரித்தார்.

மேலும் அமைச்சரவையின் முடிவை மீறி ஏ.எப்.டி பஞ்சாலையை மூட ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளதாகவும், அரசு சார்பு தொழிற்சாலைகளை மூடு விழா காண கிரண்பேடி செயல்படுவதாக குற்றச்சாட்டிய நாராயணசாமி, புதுச்சேரி அரசு தொழிலாளர் பக்கம் தான் உள்ளது எந்த தொழிற்சாலையையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், ஏ.எப்.டி தொழிலாளர்களுக்கான ஊதிய பலன்கள் கண்டிபாக கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.