நேரு யுவகேந்திரா சார்பாக விழிப்புணர்வு ஓட்டம்: மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்பு

Author: kavin kumar
13 August 2021, 4:32 pm
Quick Share

வேலூர்: வேலூரில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேரு யுவகேந்திரா சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து ஓட்டத்தில் பங்கேற்றார்.

வேலூரில் கோட்டை காந்தி சிலை அருகிலிருந்து நேரு யுவகேந்திரா சார்பாக 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டுப்பற்றையும், மக்களிடம் சுதந்திரம் போராடி பெற்றதையும் பல தியாகங்களை செய்ததையும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நேரு யுவகேந்திரா சார்பாக விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்ததுடன் இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் அவரும் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் ஓடினார். இந்த விழிப்புணர்வு ஓட்டம் காந்தி சிலை அருகிலிருந்து துவங்கி பழைய பேருந்து நிலையம் மற்றும் அண்ணாசாலையின் வழியாக மீண்டும் காந்தி சிலை அருகில் நிறைவடைந்தது. இதில் மாணவர்கள் கையில் தேசிய கொடியுடன் ஓடினார்கள்.

Views: - 576

0

0