அய்யா வைகுண்டர் அவதார தினவிழா .! குமரி மாவட்டத்திற்கு 4- ந்தேதி உள்ளூர் விடுமுறை

28 February 2021, 6:38 am
Quick Share

கன்னியாகுமரி: அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவை யொட்டி குமரி மாவட்டத்திற்கு 4- ந்தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி 189 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வருகிற 4-ந்தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. 4- ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக மார்ச் 4 -ம் தேதி சனிக்கிழமை 27-ம் தேதி வேலை நாளாக இருக்கும் .4-ம் தேதி விடுமுறை நாளில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் .இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

Views: - 6

0

0