ஆடிப்பெருக்கு விழா : வெறிச்சோடிய ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை

2 August 2020, 1:56 pm
Quick Share

திருச்சி: கொரோனா ஊரடங்கு காரணமாக,ஆடிப்பெருக்கு விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதையொட்டி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை வெறிச்சோடிய காணப்பட்டது.

ஆடிப்பெருக்கு திருவிழா அன்று பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று காவிரித்தாயை வாளான் அரிசி, பழங்கள், தேங்காய், வாழைப்பழம் கொண்டு படையல் யிட்டு வழிபடுவது வழக்கம். மேலும் புதுமண தம்பதியர் ஆற்றுக்கு சென்று முளைப்பாரியை விட்டு காவிரி தாயை வணங்கி புது தாலிக்கயிற்றை மாற்றுவார்கள். இதன் காரணமாக ஆயிரக்கனக் காண பொதுமக்கள், புதுமண தம்பதிகள் வருவார்கள்.

இந்த வருடம் இடத்தில் கொரனா தொற்று நோய் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு தொடர்ந்து 7வது முறையாக ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. மேலும் இம்மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமை தோறும் எந்த தளர்வும் இல்லாத முழு அடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இன்று கொண்டாடப்படும் ஆடி பதினெட்டு திருவிழாவை கொண்டாடுவதற்கு திருச்சி மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல்துறை நிர்வாகமும் தடை விதித்தனர். மேலும் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் படித்துறை உள்ளிட்ட, காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் ஆகிய பகுதி முழுவதும் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி பொதுமக்கள் அங்கு செல்லாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு வந்த புதுமண தம்பதிகள் மற்றும் பொதுமக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் பொதுமக்கள் வருத்தத்துடன் திரும்பி சென்றனர். வருடம் தோறும் ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்த நிலையில், இன்று காவிரி படித்துறைகள் வெறிச்சோடின.

Views: - 8

0

0