குடோனில் பதுக்கி வைத்திருந்த பான்பராக், குட்கா பறிமுதல்: 2 பேர் கைது…

Author: Udayaraman
29 July 2021, 7:29 pm
Quick Share

வேலூர்: பொன்னையில் மளிகை கடை குடோனில் பதுக்கி வைத்திருந்த 3 லட்சம் மதிப்பிலான பான்பராக், குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் உள்ள மளிகை கடையின் குடோனில் தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பொன்னை காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்து சென்ற பொன்னை காவல் துறையினர் சோதனை செய்ததில், மளிகை குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான்மசாலா போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் மளிகை கடையின் உரிமையாளர்களான வெங்கடேசன் மற்றும் துரைமுருகன் (சகோதரர்கள்) ஆகியோரை கைது செய்து பொன்னை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 391

0

0