புகையிலைப் பொருட்களை பதுங்கி வைத்து இருந்த நபர் கைது…

23 August 2020, 9:42 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பதுங்கி வைத்து இருந்த ஒருவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 25 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

அருப்புக்கோட்டை பெத்தம்மாள்நகரில் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தப்பதாக அருப்புக்கோட்டை நகர காவல் நிலையத்திற்க்கு வந்த ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள வீட்டில் சோதனை செய்தனர். அப்போது தமிழக அரசல் தடை செய்யப்பட்ட 25 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து புகையிலைப் பொருட்களை பதுங்கி வைத்து இருந்த முத்துராஜ் என்பரை கைது செய்து அவரிடம் இருந்து 25,000 ரூபாய் மதிப்புள்ள புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

Views: - 27

0

0