பொள்ளாச்சியில் மீண்டும் தலைதூக்கும் பேனர் கலாச்சாரம் ..உயிர் பலி வாங்க காத்திருக்கும் பேனர்களால் மக்கள் பீதி….!!

8 September 2020, 4:05 pm
Quick Share

சென்ற வருடம் சென்னை பள்ளிக்கரணையில்  சாலைகளில் வைக்கப்பட்ட பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற மாணவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் இச்சமபவத்தை தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர் வைத்ததாக சம்பத்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.அதனை தொடர்ந்து  தமிழகத்தில் கட்வுட், பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது..

ஆனால் தற்போது பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மக்கள் மிக அதிமாக கூடும்
 இடங்களில் கண்ணீர் அஞ்சலி கட்டவுட்கள், விளம்பர பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றன. அதிலும் குறிப்பாக பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் அமைத்துள்ள காய்கறி சந்தைக்கு சில்லறை விற்பனையாளர்கள் உட்பட பல பொதுமக்கள் காய்கறிகளுடன் இருசக்கர வாகனங்களில் வரும் போது அங்கு வைக்கப்பட்டுள்ள கண்ணீர் அஞ்சலி பேனர்களால் அதிக அளவில் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்ப்படுத்துவாதக உள்ளது. தமிழக அரசு இதுபோன்ற  கட்வுட், பேனர்கள் வைக்க தடை விதித்துள்ள போதும் தடையை மீறி வைக்கப்படும் பேனர்களை காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது .

மேலும்  இறந்தவர்களுக்கு வைக்கப்படும் கண்ணீர் அஞ்சலி பேனர்கள் உயிருடன் உள்ள மக்களுக்கு எமனாக மாறிவிடக்கூடாது   எனவும்  இத்தகைய பேனர்களால் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்று  உயிர் இழப்புகள் ஏற்பட்டுவதற்கு முன் பொதுமக்களின் உயிருக்கு பேராபத்து  எற்படுத்தும் வகைளில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களை சம்மந்த பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அவற்றை அகற்ற வழிவகை செய்ய வேண்டும் எனவும்  பொள்ளாச்சி மக்கள் பொள்ளாச்சி காவல் துறைக்கும் , சமந்தபட்ட அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Views: - 0

0

0