கோயில் யானைக்கு ரூ.5 லட்சம் செலவில் குளியல் தொட்டி

Author: Udhayakumar Raman
10 September 2021, 5:59 pm
Quick Share

திருச்சி: மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் யானை லட்சுமிக்கு, ஷவர் வசதியுடன் குளியல் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான லட்சுமி என்கிற யானைக்கு நாகநாதர் கோவில் தெப்பக்குளம் அருகில் குளிப்பதற்கு ஷவர் வசதிகளுடன் புதிய குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி கலந்து கொண்டு புதிய ஷவர் குளிருடன் கூடிய தொட்டியை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கோவில் யானை லட்சுமியை பாகான் குளியல் தொட்டிக்கு அழைத்து வந்து உள்ளே இறங்கினார். தொட்டியில் இருந்த தண்ணீரை கண்டதும் யானை லட்சுமி சந்தோசத்தில் துள்ளி குதித்து தண்ணீரில் குதூகலமாக விளையாடிது.

இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தங்களது செல்போன் மூலம் வீடியோ எடுத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவில் உதவி ஆணையர் விஜயராணி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் வழிகாட்டுதலின் படியும், அமைச்சர் சேகர்பாபு ஆணைக்கிணங்க திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் யானை லட்சுமிக்கு 4 அடி உயரத்தில், 5 லட்சம் செலவில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளியல் தொட்டி மூலமாக யானை தினமும் குளிப்பதற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Views: - 121

0

0