ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்…

14 August 2020, 7:30 pm
Quick Share

திருச்சி: நெல்லையில் பணியின் போது பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளருக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவையினர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட ஆதித்தமிழர் தூய்மை தொழிலாளர் பேரவையின் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியாளர்களை பணிக்கு குப்பை அள்ளும் வாகனங்களில் அழைத்து செல்வதை தடை செய்ய வேண்டும், தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு வந்து செல்லும் வகையில் ஏதுவாக வேன் வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்,

மேலும் தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் பணி சம்பந்தப்பட்ட முககவசம், கையுரை காலணிகளை பணியாளருக்கு உடனே வழங்க வேண்டும், மேலும் நெல்லையில் பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளருக்கு குடும்பத்தினருக்கு ரூபாய் 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் செங்கைகுயிலி, திருச்சி மாவட்ட நிர்வாகிகள் லட்சுமி, ராஜாத்தி அம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 7

0

0