சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க பூமி பூஜை: பணிகளை தொடங்கி வைத்த நாராயணசாமி

13 January 2021, 5:33 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா திடலை பொலிவுறு நகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சிறு விளையாட்டு அரங்கமாக 12 கோடியில் அமைக்க நடைபெற்ற பூமிபூஜையில் நாராயணசாமி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் பொலிவுறு நகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றது. கடற்கரை சாலை , நகர பகுதிகள் உள்ளிட்ட பகுதிகள் சீரமைப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி பொலிவுறு நகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அண்ணா திடலை சிறு விளையாட்டு திடலாக மாற்ற பூமிபூஜை இன்று காலை நடைபெற்றது . முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்று பூமிபூஜை செய்து 12 கோடி மதிப்பில் பணிகளை தொடங்கி வைத்தார்.

இங்கு உள்விளையாட்டு அரங்கம், ஓடு பாதை, டென்னிஸ் , வாலிபால் விளையாட்டு திடல் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் பொலிவுறு திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைந்து பல்வேறு பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Views: - 4

0

0