தருமபுரியில் 25 புதிய திட்டப்பணிகளை பூமிபூஜை

14 September 2020, 9:58 pm
Quick Share

தருமபுரி: காரிமங்கலம் பேரூராட்சியில் ரூ.1 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் 25 புதிய திட்டப்பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் பேரூராட்சி சின்னமிட்ட அள்ளி, கண்ணாளன் கொட்டாய், பெரியமிட்ட அள்ளி, ராஜீவ் காந்தி நகர், சபரி ஐயப்பன் பள்ளி பின்புறம் ஆகிய பகுதிகளில் ரூ33 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் 940 மீ தொலைவிற்கு சிமெண்ட் சாலைகள் அமைத்தல், வார்டு 12-ல் பேருந்து நிலையம் முன்புறம் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டிலும் 142 மீ தொலைவிற்கு பேவர்பிளாக் சாலை அமைத்தல், போயர் தெரு, அருணேஸ்வர் தெரு, சவுடப்பட்டி தெரு, தேவகாண்டலா தெரு ஆகிய பகுதிகளில் ரூ29 லட்சதது 60 ஆயிரம் மதிப்பீட்டில் 915 மீ தொலைவிற்கு சிமெண்ட் சாலைகள் அமைத்தல் உள்ளிட்டவை துவங்கப்பட்டுள்ளது.

மேலும் வார்டு 11-ல் ஆஞ்சநேயர் ரைஸ்மில் ரோட்டில் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் 192 மீ தொலைவிற்கு தார் சாலை அமைத்தல், சே~ப்பநாயுடு கொட்டாய், இந்தியன் வங்கி சந்து, வெற்றிலைக்காரர் தெரு ஆகிய பகுதிகளில் ரூ18 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் 555 மீ தொலைவிற்கு சிமெண்ட் சாலைகள் அமைத்தல், வார்டு 5 ல் மாரப்பகவுண்டர் கொட்டாய் மற்றும் வெற்றிலைகாரன் கொட்டாய் பகுதிகளில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டிலும் 660 மீ தொலைவிற்கு சிமெண்ட்சாலை அமைத்தல்,

வார்டு 3 ரூ32 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் 1168 மீ தொலைவிற்கு சிமெண்ட் சாலைகள் அமைத்தல் என 25 புதிய திட்டப்பணிகள் ரூ. கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.