கேபிரில்லாவை Captain ஆக்க, அவரை முதுகில் சுமந்த சுரேஷ்: நாளுக்கு நாள் மாஸ் காட்டும் தாத்தா !

Author: Poorni
16 October 2020, 1:06 pm
Quick Share

இன்றைய நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த Captain-க்கான கொடுக்கப்பட்ட டாஸ்க் என்ன என்றால், 3 போட்டியாளர்களை அதிக நேரம் முதுகில் சுமந்து நிற்க வேண்டுமாம் அந்த 3 போட்டியாளர்களை ரியோ, வேல்முருகன் மற்றும் கேப்ரில்லா ஆகிய மூவரை சுமக்க போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் வேல்முருகனை ஆரியும், ரியோவை பாலாஜி முருகதாஸும், கேப்ரில்லாவை சுரேஷ் தன் முதுகில் சுமந்தார். ஒரு சமயத்தில் அவர் உடம்பு முழுவதும் வியர்த்து போய் சுத்தமாக அவரால் சமாளிக்க முடியாமல் போனாலும் அவர் தன்னம்பிக்கையை விடாமல் கட்டுப்படுத்தி கேப்ரில்லாவை முதுகில் சுமந்தார். “வேண்டாம் தாத்தா நான் இறங்கி கொள்கிறேன்” என்று கேப்ரில்லா கூறியதைப் பொருட்படுத்தாத சுரேஷ் “இறங்க வேண்டாம்” என மீண்டும், தனது மொத்த உடல் பலத்தை தாக்குப்பிடித்து நின்றார். ஆனால் கேப்ரில்லா மனம் கேட்க்காமல் முடியாமல் கீழே இறங்கிவிட்டார்.

மனதளவில், பலரை அழாக வென்று வந்த சுரேஷ், தற்போது உடலளவிலும் தனது பலத்தை காட்ட ஆரம்பித்து விட்டதால் நாளுக்குநாள் அவரது மாஸ் அதிகரித்து வருவதாக கமெண்ட்டுகள் பதிவாகி வருகிறது.

Views: - 69

0

0