இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் தீ வைத்து எரிப்பு; ‘சைக்கோ’ நபர் கைவரிசையா?

22 September 2020, 3:58 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் நள்ளிரவில் வெவ்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் அருள்ராஜ் 36, இவர் ஜிப்மரில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு தனது வீட்டு வாசலில் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் அருள்ராஜின் வாகனம் தீயில் எரிந்து சாம்பலானது. இருசக்கர வாகனம் எரிப்பு குறித்து அருள்ராஜ் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை எரித்த மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

இதே போல் புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் வீதியில் வசிப்பவர் வழக்கறிஞர் கங்காதரன், இவர் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் விமல். அதே பகுதியில் டைலஸ் கடை நடத்தி வருகிறார் இவரின் இரண்டு இருசக்கர வாகனமும் கங்காதரனின் காரும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. இந்நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் விமலின் இருசக்கர வாகனத்தில் தீ வைத்து கொளுத்தியதால் இரண்டு இருசக்கர வாகனமும் தீயில் கருகி சாம்பல் ஆகியுள்ளது. அப்போது அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் கங்காதரனின் காரின் பின் பகுதியும் முற்றிலுமாக எரிந்தது. இச்சம்பவம் குறித்து விமல் அளித்த புகாரை அடுத்து பெரியகடை போலீசார் வழக்கு பதிவு செய்து,

அப்பகுதியில் பொருத்தப்படிருக்கும் சிசிடிவி காட்சிகள் மூலம் வாகனங்களுக்கு தீ வைத்து ஏரித்த மர்ம நபரை தேடி வருகின்றனர். புதுச்சேரி நகர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. மேலும் ஒரே நபரை வெவ்வேறு இடத்தில் இருசக்கர வாகன ஏரிப்பில் ஈடுப்பட்டு உள்ளரா என்ற கோணத்திலும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 4

0

0