ரூ. 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கிளார்க் கைது

26 February 2021, 9:57 pm
Quick Share

மயிலாடுதுறை: சீர்காழி அருகே விவசாயி ஒருவரின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசின் நேரடி கொள்முதல் நிலைய பில் கிளார்க்கை லஞ்ச ஒழி ப்பு போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு, மூட்டை ஒன்றுக்கு ரூ.40 லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. புகார்களின் மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சீர்காழி தாலுக்கா கீழதேனூர் கி ராமத்தை சேர்ந்தவர் விவசாயி துரை கண்ணன். தனது வயலில் விளைவித்த 172 நெல் மூட்டைகளை அருகில் உள்ள கொண்டல் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொண்டுவந்துள்ளார்.

அந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய மூட்டைக்கு தலா ரூ.40வீதம், ரூ.6 ஆயிரத்து 980, கூடுதலாக ரூ.20 சேர்த்து மொத்தம் ரூ.7 ஆயிரம் ரவுண்டாக கொடுக்க வேண்டும் என கொள்முதல் நிலைய பில்கிளார்க் இளங்கோவன் கேட்டுள்ளார். அதை கொடுக்க மனமில்லாத துரைகண்ணன், நாகை லஞ்சஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்துள்ளார். போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனபவுடர் தடவிய பணத்தை கொள்முதல் நிலையத்தில் இருந்த பில்கிளார்க் இளங்கோவனிடம், துரைகண்ணன் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி.நந்தகோபால் தலை மையிலான போலீசார் இளங்கோவனை கையும் களவுமாக, லஞ்ச பணத்துடன் கைது செய்தனர். அப்போது அங்கு திரண்ட லோடு மேன்கள் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்யப்பட்ட பில்கிளார்க் இளங்கோவனை நாகை லஞ்சஒழிப்பு சிறப்புகோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர்.

Views: - 8

0

0