ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்: தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவர் கோரிக்கை

6 July 2021, 7:29 pm
Quick Share

நீலகிரி: அனைத்து தரப்பு மக்களுக்கும் தடையின்றி உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு திட்டம் நீலகிரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு மாநில உணவு  ஆணையத்தின் தலைவர் வாசுகி கூறினார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று மத்திய அரசின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்துக்கொண்ட பின் செய்தியாளர்களிடையே பேசிய அவர்,  நீலகிரி மாவட்டத்தில் தொலை தூர கிராமங்களில் இத்திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதன் காரணமாக உணவு பொருட்கள் தடையின்றி பழங்குடியின மக்களுக்கு கிடைப்பதாக கூறினார். தர்மபுரி மாவடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பழங்குடியின மக்களுக்கு ஆதார் அட்டை இல்லாததையடுத்து ஸ்மார்ட் கார்டு வழங்கப்படாமலிருப்பதாகவும், இதற்கு ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

நீலகிரி மலை மாவட்டம் என்பதால்  குடும்ப அட்டை தாரர்களுக்கு தற்போது  வழங்கப்படும் ஒரு லிட்டர் மண்ணெண்ணையை உயர்த்தி வழங்க அரசிடம் பரிந்துரைக்கப்படும்  என்றார். மத்திய அரசு ரேஷன் கடைகளில் பயோ  மெட்ரிக் முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியதையடுத்து  இம்முறை நியாய விலை கடைகளில் தற்போது பின்பற்றப்பட்டு வருவதாகவும், இதற்கு குடும்ப தலைவனோ அல்லது குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவரோ சென்று கை ரேகை பதிவு செய்து பொருட்களை வாங்கலாம் என்றும் அவர் கூறினார்.  

Views: - 41

0

0