பாஜக வேட்பாளர் தணிகைவேல் வேட்பு மனு தாக்கல்

19 March 2021, 4:53 pm
Quick Share

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர் தணிகைவேல் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக தலைமை அலுவலகத்தில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளராக தணிகைவேல் அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பாஜக வேட்பாளர் தணிகைவேல் தனது வேட்பு மனுவினை திருவண்ணாமலை தொகுதி தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியரும்மான வெற்றிவேலிடம் தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக வேட்பாளர் தணிகைவேல், திருவண்ணாமலை தொகுதியை நெம்பர் ஒன் தொகுதியாக மாற்றுவதே என்னுடைய முதல் பணி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எ.வ வேலு கடந்த 15 ஆண்டு காலமாக திருவண்ணாமலை தொகுதியில் எந்தவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை எந்த ஒரு வளர்ச்சியையும் செய்யவில்லை நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டால் விரைவில் அனைத்து வளர்ச்சிகளையும் கொண்டு வருவேன் என்று பதிலளித்தார்.

Views: - 32

0

0