பாஜக எந்த சூழ்நிலையிலும் ஆட்சியை பிடிக்க முடியாது: நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பேட்டி

17 July 2021, 5:58 pm
Quick Share

தருமபுரி: தமிழகத்தில் பாஜக எந்த சூழ்நிலையிலும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது அவர்களுக்கே தெரியும் என்றும், அதனால் தான் அவர்கள் பிரிவினை வாதத்தில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 130 பயனாளிகளுக்கு ரூபாய் 32 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித் தொகையுடன் தலா 8 கிராம் தாலிக்கு தங்கத்தினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி வழங்கினார். அப்போது பேசிய அவர் தமிழக அரசு பெண்களின் வாழ்க்கை தரம் முன்னேற்த்திற்காகவும், பெண் கல்வி ஊக்கப்படுத்திடவும் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழ்மையின் காரணமாக பெண்களின் திருமணம் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காவும்,

தமிழக அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ.25,000 நிதியுதவியும், 8 கிராம் தாலிக்கு தங்கமும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் 8 கிராம் தாலிக்கு தங்கமும் வழங்கி வருகிறது. பெண் கல்வியை ஊக்கப்படுத்தவே திருமண நிதி உதவித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்சியில் கலந்து கொண்ட தருமபுரி மருத்துவர் செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்த அவர், மொரப்பூர் தருமபுரி இரயில் பாதை திட்டம் நீணட நாட்களாக கிடப்பில் உள்ளது. மொத்தம் 18 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த இரயில் பாதையில் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஆய்வு பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள 8 கிலோ மீட்டர் நகர பகுதியில் வருவதால் பல்வேறு பிரச்சணைகள் உள்ளதால் அந்த 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாற்று பாதையில் அமைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் அதற்காக சுமார் 2 அரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கபட்டுள்ளது என்றும்,

அடுத்த வாரத்தில் ஆய்வு பணிகள் துவங்கபட்டு அப்பணிகள் நிறைவடைந்தவுடன் மீதமுள்ள பணிகளுக்கு ஆழுத்தம் கொடுத்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கபடும் என்றார். மேலும் கூறிய அவர் தமிழகத்தில் பாஜக எந்த சூழ்நிலையிலும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பது அவர்களுக்கே தெரியும். அதனால் தான் அவர்கள் பிரிவினை வாதத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அது எடுப்படாது என்று கூறினார். இந்நிகழ்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன், மாவட்ட சமூக நல அலுவலர் நாகலட்சுமி, மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 87

0

0