வீட்டில் விபச்சாரம் நடத்தியதாக பாஜக பிரமுகர் கைது:விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை

Author: Udayaraman
27 July 2021, 6:54 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் வீட்டில் விபச்சாரம் நடத்தியதாக பாஜக பிரமுகரை விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஸ்ரீரங்கம் 68வது கிளை பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் கோபிநாத். என்பவர் தனது வீட்டில் விபச்சாரம் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரின் வீட்டில் ஒரு பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.

பாஜக பிரமுகர் கோபிநாத் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் ஆகியோரிடம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் திருச்சியில் உள்ள கல்லூரி பெண்கள் சிலரை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பாஜக பிரமுகர் வீட்டிலேயே விபச்சாரம் நடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 208

0

0