பாஜக தேசிய பொதுச் செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் நாளை உதகை வருகை: வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை

4 March 2021, 6:37 pm
Quick Share

நீலகிரி: பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் நாளை உதகை வருவதையொட்டி சிறப்பான வரவேற்பு அளிப்பது பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது போன்றவை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பாஜக தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவின் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இதனிடையே நாளை பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் சி, டி ரவி மாநில துணைத் தலைவர் நரேந்திரன், மாநில பொதுச் செயலாளர் ஜி கே எஸ் செல்வகுமார் , ஆகியோர் உதகை வருகை புரியும் நிலையில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் உதகையில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது.

உதகையில் பேரணியும் பொதுக்கூட்டத்தை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடையே உரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உறுப்பினர்கள், கலந்து கொள்ள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், உட்பட பொறுப்பாளர்களும் மண்டல் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Views: - 5

0

0