மோசடி செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் மனு

7 September 2020, 6:01 pm
Quick Share

திருச்சி: வேளாண் உதவி திட்டத்தில் மோசடி செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் மனு அளித்தனர்

திருச்சி பாரதிய ஜனதா கட்சியின், விவசாய பிரிவு மாநகர மாவட்ட தலைவர் கற்கண்டு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் மனு அளித்தனர். அம்மனுவில் பாரத பிரதமரின் வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூபாய் 2000 என ஆண்டுக்கு 6ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்கப்படும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் 4 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டம் இணையதளம் மூலம் பதிவு செய்து வழங்கப்பட்டு வருகிறது. சிலர் இணைதளத்தில் பதிவு செய்ய அரசு மேற்கொண்டுள்ள வழிகளை தவறாகக் கையாண்டு விவசாயம் அல்லாதவர்களுக்கும் இந்த உதவித்தொகையை பெற்று தருகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடியது. எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் இடத்தின் பணம் விவசாயிகள் சென்று அடைகிறதா என்பதை கண்டறிந்து மோசடி நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Views: - 0

0

0