அதிமுக வேட்பாளர் எம் முருகனை சந்தித்து வாழ்த்து கூறிய பாஜக மாநில பொறுப்பாளர்

Author: Udhayakumar Raman
14 March 2021, 8:42 pm
Quick Share

தேனி: பெரியகுளம் (தனி) சட்டமன்றம் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் எம் முருகனை பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளர் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொறுப்பாளர் ராஜபாண்டி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி (தனி) அதிமுக வேட்பாளர் முருகனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கூறினர்.

தங்களது ஆதரவை தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அதிமுக வேட்பாளர் எம் முருகன் வெற்றி பெற வாழ்த்துக்கள் கூறியதோடு களத்தில் இணைந்து பணியாற்றி வெற்றியை பெற்றிடுவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள் வினோத். சஞ்சிவி ஆதிஷ்வரன். உள்ளிட்ட பொறுப்பாளர்களும் மற்றும் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்லமுத்து உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உடனிருந்தார்

Views: - 37

0

0