புதுச்சேரியில் கட்சிக்கு ஆள்பிடிக்கும் பாஜக: முதல்வர் நாராயணசாமி பேச்சு

31 January 2021, 3:21 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கட்சிக்கு ஆள்பிடிக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர. வீரப்பமொய்லி, பல்லம் ராஜூ, மற்றும் புதுச்சேரி மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், சஞ்சய் தத், மாநில காங்கிரஸ் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் நாராயணசாமி, வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கூட்டணியில் பலமான வேட்பாளர்கள் உள்ளதாகவும், எ.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சிகளில் வேட்பாளர்களை தேடிகொண்டிருப்பதாக தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, தற்போது புதுச்சேரியில் ஆள்பிடிக்கும் வேலையில் பாஜக இறங்கியுள்ளதாகவும் எவ்வளவு ஆட்களை பிடித்தாலும்,

பணம் செலவு செய்தாலும் புதுச்சேரியில் பாஜக மண்ணை கவ்வும் என்றும் விரைவில் ராகுல் காந்தி புதுச்சேரிக்கு வருவதாக தெரிவித்த நாராயணசாமி அனைவரும் ஒற்றுமையாக இருந்து மீண்டும் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Views: - 0

0

0