மேகதாது அணை விஷயத்தில் பாஜக இரட்டை வேடம்: திருநாவுக்கரசர் பேட்டி…

Author: Udayaraman
3 August 2021, 11:57 pm
Quick Share

திருச்சி: மேகதாது அணை விஷயத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக திருநாவுக்கரசர் குற்றச்சாட்டியுள்ளார்.

காமராஜரின் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் 119 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட வழங்கும் விழா திருச்சி காஜாமியான் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,”மேகதாது அணை விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக கமல் தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், (கமல்) அவர் சொல்வது சரிதான். கர்நாடகத்தில் ஆட்சியில் இருப்பது பாஜக,

மத்திய ஆட்சியில் இருக்கும் அரசு பாஜக. தமிழக தலைவர் தமிழ்நாட்டுல உண்ணாவிரதம் என்று சொல்வது பிரச்சினையை திசை திருப்பவும், கவனத்தை திசை திருப்பும் சொல்வது. அறிவிப்பில் உண்மை இல்லை அந்த அறிவிப்பில் நேர்மை இல்லை என தெரிவித்தார். மேலும், கருணாநிதி படத்திறப்பு விழாவில் ஒவ்வொருவருடைய தலைவரின் பெயரை கூறினால் எப்படி. படம் திறந்தது கலைஞருக்கு எனவே, அவருக்கு மட்டும் தான் முன்னிலை கொடுக்க முடியும் காமராஜர் பெயர், எம்ஜிஆர் பெயர், ஜெயலலிதாவின் பெயர் சொல்லவில்லை என்பது விதண்டாவாதம் தேர்தல் தொடங்கிய காலத்திலிருந்து 15 முறை முதலமைச்சராக இருந்தவர். தோல்வியில் காணாமல் வெற்றி பெற்றவர். அவருடைய நிகழ்ச்சியில் எல்லா கட்சியினரும் கலந்து கொண்டிருந்தால் அது மகிழ்ச்சிக்குரிய காரியமாக இருந்திருக்கும் என தெரிவித்தார்.

Views: - 90

0

0