போக்குவரத்து நெரிசலை குறைக்க வலியுறுத்தி கருப்பு கொடி கட்டி வியாபாரிகள் போராட்டம்…

Author: Udayaraman
16 October 2020, 3:50 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வலியுறுத்தி கடைகளின் முன்பு கருப்பு கொடி கட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஈரோடு பஸ்நிலையம் அருகேயுள்ள நாச்சியப்ப வீதி. ஈரோட்டின் முக்கிய சாலையாக விளங்கும் இந்த சாலை கடந்த 3 மாதங்களாக போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது .மேட்டூர் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றியதால் நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி நாச்சியப்பா வீதி வியாபாரிகள் தங்களின் கடை முன்பு கருப்பு பொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து நெரிசலால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும், காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வலியுறுத்தி 200 க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பு கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 29

0

0