சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்ற மூன்று பேர் கைது…

15 August 2020, 11:35 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் சட்டவிரோதமாக மூன்று இடங்களில் மதுபானம் விற்ற மூவரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இந்தியா முழுவதும் 74ஆம் ஆண்டு சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகளுக்கு அரசு விடுமுறை வழங்குவது வழக்கம். அதனால் இன்று அரசு விடுமுறை என்பதால் ஆமத்தூர் பகுதியில் சட்ட விரோதமாக தோட்டம் மற்றும் வாட்டர் டேங்க் மற்றும் குளியல் தொட்டி போன்ற பொது இடங்களில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதாக காவல் நிலைய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலீசார் சோதனை நடத்தியதில் மது பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்ற ஆமத்தூரை சேர்ந்த முத்துக்குமார், முத்துராஜ், கருப்பசாமி ஆகிய மூவரை கைது செய்து, அவர்களிடமிருந்த 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Views: - 30

0

0