பூங்காவில் உள்ள பறவைகளுக்கு இரத்த மாதிரி பரிசோதனை…

5 August 2020, 8:56 pm
Quick Share

கோவை: கோவையில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது

கோவை மாநகரின் மையப் பகுதியில், நேரு விளையாட்டு அரங்கில் அருகில் அமைந்துள்ளது வ.உ.சி. உயிரியல் பூங்கா. 1965-ல் தொடங்கப்பட்ட இந்தப் பூங்காவில் தொடக்கத்தில் முயல், வாத்து, யானை, புலி உள்ளிட்டவைகள் இருந்துள்ளன. எனினும், இடப்பற்றாக்குறை காரணமாகவும், வன விலங்குகள் சட்டம் காரணமாகவும் பெரிய விலங்குகள் இங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டன.தற்போது, நரி, குரங்கு, மயில், கிளி, மான், பாம்பு என 800-க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் இங்கு உள்ளன. ஏறத்தாழ 4.35 ஏக்கர் பரப்பில் உள்ள உயிரியல் பூங்காவில், 200-க்கும் மேற்பட்ட மரங்கள் இருப்பதால்,குளுகுளு சூழல் நிலவுகிறது.

பூங்காவில் நிலவும் தட்டவெப்பநிலை காரணமாகவும், விலங்குகள், பறவைகளைக் காணவும் தினமும் ஏராளமானோர் இங்கு வருகின்றனர். இந்த நிலையில் மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை வ.உ.சி உயிரியியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பூங்காவில் உள்ள 15 பறவைகளுக்கு இரத்தம் மாதிரிகள் எடுக்கப்பட்டது. மேலும் அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்குகள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளது.

Views: - 8

0

0