விவசாய கிணற்றில் இரண்டு சிறுமிகளின் உடல் மீட்பு

11 November 2020, 4:24 pm
Quick Share

செங்கல்பட்டு: சதுரங்கப்பட்டினம் அருகே விவசாய கிணற்றில் இரண்டு சிறுமிகள் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சதுரங்கப்பட்டினம் அருகே ஆமைப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு வசிப்பவர் அரிகிருஷ்ணன் சீதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள். பிரியங்கா வயது 16 பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், இவரது தங்கை செண்பகவள்ளி வயது 12 ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர் . தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் ஹரி கிருஷ்ணன் நேற்று மதியம் இரண்டாவது ஷிப்ட் வேலைக்கு சென்றுவிட்டார் . இரவு 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். சிறுமிகளின் தாயார் சீதா கல்பாக்கம் அணு மின் நிலைய வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வருகிறார் .

சீதா இரவு 9 மணியளவில் தினந்தோறும் வீடு திரும்புவார் .அப்படி திரும்பும் நிலையில் இவரை அழைத்து வர இரண்டு சிறுமிகளும் செல்வார்கள் . ஆனால் நேற்று இரவு இரண்டு சிறுமிகளும் தாயாரை அழைத்து வரச் சொல்லவில்லை . அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்த சீதா அரிகிருஷ்ணனுக்கு தகவல் அளித்ததின்பேரில் அருகில் உள்ள இடங்களில் தேடினர். பின்னர் சிறுமிகள் கிடைக்காத நிலையில் சதுரங்கப்பட்டினம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தம்பதியினர் சுற்றுவட்டார பகுதிகளில் தேடிக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை விவசாய கிணற்றில் இரண்டு உடல்கள் மிதப்பதாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து ஹரி கிருஷ்ணன் மற்றும் சீதா கிணற்றின் அருகே சென்று பார்த்த போது அவர்களது இரண்டு மகள்களும் கிணற்றில் உயிரிழந்த நிலையில் நீரில் மிதந்து உள்ளனர். இரண்டு சடலங்களையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கிணற்றுக்கு மேலே கொண்டு வந்தனர். சதுரங்கப்பட்டினம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு செங்கல்பட்டு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . ஹரி கிருஷ்ணன் சீதா தம்பதியினர் குறவர் இனத்தை சார்ந்தவர்கள். குழந்தைகளை படிக்க வைப்பது என்பது மிகப் பெரிய விஷயம் . தங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருவரும் உழைத்து சிறுமிகளை படிக்க வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 24

0

0