சுதந்திர தினத்தையொட்டி திருக்கோவிலூரில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!!

Author: kavin kumar
13 August 2021, 6:32 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: சுதந்திர தினத்தையொட்டி திருக்கோவிலூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு போலீசார், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக சோதனையில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், திருக்கோவிலூர் நகர் பகுதியில் உள்ள உலக புகழ்பெற்ற உலகளந்த பெருமாள் கோவில், அட்ட விரட்டானங்களில் இரண்டாம் வீரட்டானமான வீரட்டானேஸ்வரர் கோவில், பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு போலீசார், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக சோதனையில் காவல் உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் மற்றும் பாலு ஈடுபட்டனர்.

Views: - 166

0

0