தனியார் நூற்பாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்: திண்டுக்கல் அருகே பரபரப்பு..!!

Author: Aarthi Sivakumar
9 March 2021, 2:09 pm
dgl bomb2 - updatenews360
Quick Share

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தனியார் நூற்பாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல் – கரூர் சாலையில் தாடிக்கொம்பு அருகே தனியாருக்கு சொந்தமான சண்முகவேல் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் வெடிகுண்டு வைத்துள்ளதாக சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் கூறி உள்ளார்.

மேலும் இரண்டு மணி நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து உள்ளார். உடனே சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து திண்டுக்கல் மாவட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தாடிக்கொம்பு போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் வெடிகுண்டு துப்பறியும் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உடன் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நூற்பாலை முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே நூற்பாலையில் உள்ள இயந்திரங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் . இதனைத் தொடர்ந்து கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றுவரும் சோதனையில் இதுவரை வெடிகுண்டு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 68

0

0