பேருந்து நிலைய வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்:வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை…

Author: kavin kumar
4 November 2021, 5:51 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே பேருந்து நிலைய வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் முசிறி பைபாஸ் சாலையில் புதிய நகரப்பேருந்து நிலையம் அமைந்துள்ளது.இந்த பேருந்து நிலைய வளாகத்தில் இன்று வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் மர்ம ஆசாமி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து முசிறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அருள்மணி மற்றும் திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு நிபுணர்கள் மோப்பநாய் ரூபி மற்றும் அதிநவீன கருவிகளுடன் பேருந்து நிலைய வளாகத்திற்குள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பேருந்து நிலையத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. உள்ளே இயங்கி கொண்டிருந்த கடைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அடைக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Views: - 174

0

0