அரசு ஊழியர்களுக்கு போனஸ்: அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு!

Author: Udhayakumar Raman
23 October 2021, 5:27 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி அரசில் பணிபுரியும் பிரிவு ‘ பி ‘ மற்றும் ‘ சி ‘ ஊழியர்களுக்கு 2020-21ம் ஆண்டுக்கான போனஸ் தொகையாக ரூ 6 ஆயிரத்தை அறிவித்துள்ளது.

மத்தியஅரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த மார்ச் 31ம் தேதி இப்படி பணியில் இருந்தவர்கள் கடந்த நிதி ஆண்டில் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடர்ந்து பணியில் இருந்தவர்கள் ஆகியோருக்கு இடைக்கால போனஸ் வழங்கப்படும். போனஸ் கணக்கிடுவதற்கான உச்சவரம்பு ரூ 7000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில அரசில் பணிபுரியும் பிரிவு ‘ பி ‘ மற்றும் ‘ சி ‘ ஊழியர்களுக்கு 2020-21ம் ஆண்டுக்கான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க நிதித்துறைக்கு உத்தரவிடப்பட்டது . இதன் மூலம் பிரிவு ‘ பி ‘ மற்றும் ‘ சி ‘ ஊழியர்களுக்கு போனஸாக ரூ .6,908 மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ . 1,184 ம் வழங்கப்படும் என நிதித்துறை சார்பு செயலர் கோவிந்தராஜன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார் . இதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்கள் 26 ஆயிரம் பேர் பயனடைவர் . இதன் காரணமாக புதுவை அரசுக்கு சுமார் ரூ . 18 கோடி கூடுதல் செலவாகும் .

Views: - 178

0

0