புத்தகம் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளியில் புத்தக கொலு

Author: kavin kumar
7 October 2021, 5:29 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தகம் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளியில் அமைக்கப்பட்ட புத்தக கொலு மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நவராத்திரி விழாவையொட்டி வீடுகள் மற்றும் கோயில்களில் சாமிசிலைகள், பொம்மைகளை கொண்டு கொலு அமைப்பது வழக்கம் அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் புக்ககொலு கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.இதில் பள்ளி பாடபுத்தகங்களை தவிர அறிவியியல், கலை இலக்கியம், சிறு கதைகள், நாவல்கள், கவிதைகள், வரலாறு உள்ளிட்ட 100க்கணக்கான புத்தகங்களை கொலு கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளதுஇந்த கொலு கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள புத்தகங்களை வாசிப்பதற்காக வகுப்பு நேரத்தில் அனுமதிக்கப்படுவதால் இந்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் இந்த புத்தகங்களை படித்து பயணடைகின்றனர். மேலும் இதன் மூலம் வாசிப்பு திறனும் மேம்படைகின்றது.

Views: - 231

0

0