கள்ளச் சந்தையில் மது பாட்டில் விற்பனை:போலீசுக்கு தகவல் சொன்ன நபர் கல்லால் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதி

11 July 2021, 2:54 pm
Quick Share

சென்னை: சென்னையில் கள்ளச் சந்தையில் மது பாட்டில் விற்பனை செய்வதை போலீசுக்கு தகவல் சொன்ன நபர் கல்லால் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஓட்டேரி மங்களபுரம் சேமாத்தம்மன்  நியூ காலனி பகுதியில் வசித்து வருபவர் ஜேன் டிமான்டி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் தனது வீட்டின் அருகே நடந்து சென்ற போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் ஜேன் டிமான்டியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் தான் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பதை நீ போலீசுக்கு எப்படி சொல்லலாம் என்று கூறி கீழே கிடந்த கல்லை எடுத்து அவரது தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ஜோன் டிமான்டி சம்பவ இடத்திலேயே தலையில் ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவ மனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக ஜேன் டிமான்டி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.’

Views: - 105

0

0