காதல் விவகாரத்தில் காதலன் தந்தை குத்தி கொலை: பெண்ணின் தந்தை உட்பட 2 பேர் தலைமறைவு

9 September 2020, 9:07 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே பட்டபகலில் காதல் விவகாரத்தில் காதலன் தந்தை குத்தி கொலை செய்த பெண்ணின் தந்தை உட்பட 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள வாய்க்கால்கரை பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் என்கிற பார்த்திபன் (42). இவரது மகன் ஆகாஷ் (20). அதேப்பகுதியில் உள்ள பெரியதெருவைச் சேர்ந்தவர் பாம்பு நாகராஜ் என்பவரது மகள் தர்ஷினியை (20). கடந்த ஒரு வருடகாலமாக இருவரும் காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாகராஜ் தனது உறவினர் குமார் என்பவருடன் சேர்ந்து பார்த்திபனை கூப்பிட்டு மகன் ஆகாஷ் தனது மகளை காதலிப்பதை விட்டு விட வேண்டும் என கூறியும், கண்டித்து வைக்குமாறு கூறினார். அப்போது இவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது.

அப்போது நாகராஜ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பார்த்திபனை சரமாரியாத குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். கத்தியால் குத்தப்பட்ட பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார். தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காத லால்குடி அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்ப ஒடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Views: - 5

0

0