பூட்டியிருந்த வீட்டின் முன்பக்க கதவு உடைத்து திருட்டு: பீரோவில் இருந்த 58 பவுன் தங்க நகைகள், 45 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

22 June 2021, 11:58 pm
Quick Share

கரூர்: பூட்டியிருந்த வீட்டின் முன்பக்க கதவு உடைப்பு பீரோவில் இருந்த 58 பவுன் தங்க நகைகள், 45 ஆயிரம் ரொக்கத்தை திருடிக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், புலியூர் பகுதியை அடுத்த எம்.பி நகரில் வசிப்பவர் விஷ்வநாதன். வயது 56. இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். இவர் அருகில் உள்ள திருச்சி சாலையில் உணவகம் நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு குடுபத்தினர் 4 பேரும் உணவகத்தில் வேலை பார்க்கச் சென்று விட்டனர். மீண்டும் மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் முன்பக்க கதவை உடைத்த மர்ம நபர்கள் வீட்டினுள் இருந்த பீரோக்களை உடைத்து அதிலிருந்து 58 பவுன் தங்க நகைக்கள், 45 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போயிருப்பதை பார்த்த உடனே வெள்ளியணை போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிருப்புகள் நிறைந்த அந்தப் பகுதியில் பட்டபகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 97

0

0