டாஸ்மாக் கடையின் சுவரை உடைத்து மது பாட்டில்கள் திருட்டு: குற்றவாளிகள் 3 பேர் கைது

Author: kavin kumar
30 September 2021, 1:52 pm
Quick Share

விருதுநகர்: திருச்சுழி அருகே 5 மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையின் சுவரை உடைத்து 3 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் திருடிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே A. முக்குளம் கிராமத்தில் கடந்த மே 25ஆம் தேதி முழு ஊரங்கின் டாஸ்மாக் கடையின் பின்புறம் சுவரை உடைத்து கடையில் இருந்த 3 லட்சம் மதிப்பிலான 4,500 மதுபாட்டில்கள் திருடப்பட்டு இருந்தன இதுகுறித்து கடையின் விற்பனையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த நபர்களை தேடி வந்த அ. முக்குளம் காவல்துறையினர் அப் பகுதியில் இருந்த சிசிடிவி பதிவு மற்றும் மோப்ப நாய் உதவியுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடிவந்தனர். இதையடுத்து இன்று அந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தைச் சார்ந்த விஜி, அய்யனார், நாகராஜ் ஆகிய மூவரையும் அ.முக்குலம் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Views: - 350

0

0