பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம்: ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் தர்ணா

1 March 2021, 4:26 pm
Quick Share

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் சுந்தராம்பாள் மன்னன் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் PMAY திட்டத்தின் கீழ் வழங்கும் வீட்டிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி அருண்குமார் லஞ்சம் கேட்பதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு வந்தபோது பல நாட்களாக அலுவலகம் திறக்கப்படாததால் இரண்டாவது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினரான சுந்தராம்பாள் மன்னன் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் தெரிவித்த போது, தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவிப்பதற்காகவும், மேலும் அந்த வார்டில் PMAY வீடு வந்துள்ளதாகவும், அந்த வீட்டிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி ரூபாய் 20,000 முதல் 30,000 வரை லஞ்சம் கேட்பதாகவும், அது சம்பந்தமாக தலைவரிடம் பேசுவதற்காக அலுவலகம் வந்தபோது திறக்கப்படாதால் ஊராட்சி மன்ற உறுப்பினர் சுந்தராம்பாள் மன்னன் மற்றும் PMAY வீடு வழங்கியோர் உள்ளிட்டோர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வந்தனர்.பின்பு ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்படாததால் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டுக்கு மேல் மற்றோர் பூட்டு போட்டனர். இதனால் வேடந்தவாடி பகுதியில் பரபரப்பு நிலவியது .

Views: - 2

0

0