பட்டா மாற்றம் செய்து தருவதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்

Author: Udhayakumar Raman
23 September 2021, 7:58 pm
Quick Share

திருவள்ளூர்: பட்டா மாற்றம் செய்து தருவதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கிராம நிர்வாக அலுவலர் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டத்திற்கு உட்பட்ட திருப்பாச்சூர் கிராமத்தில் சிலம்பரசன் என்பவரிடம் பட்டா மாற்றம் செய்து தருவதற்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது கிராம நிர்வாக அலுவலர் திருமாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகம் அருகே அமைந்த திருப்பாச்சூர் கிராமத்தில் பட்டா மாற்றம் செய்து தர ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 117

0

0