அண்ணன் மற்றும் தம்பி தூக்குப்போட்டு தற்கொலை: குடும்பத்தினர் அதிர்ச்சி

8 February 2021, 10:49 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஒரே வீட்டில் இரண்டு மின்விசிறியில் வாகன பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்த சகோதரர்கள் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை உண்டாக்கியது.

காஞ்சிபுரம் அடுத்த செட்டியார் பேட்டை பகுதியைச் சார்ந்த சகோதரர்களான வினோத் மற்றும் சதீஷ் இருவரும் மெக்கானிக் தொழில், மற்றும் வெல்டிங் தொழில் செய்து வந்தனர்.சகோதரர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளது. வினோத் மனைவி சுகன்யா (வயது 23 ) மற்றும் அவரது 2 வயது பெண் குழந்தையுடனும் அதேபோன்று அவரது தம்பி சதீஷ்குமார் மனைவி கலைவாணி (வயது 25) இவர்களுக்கு 6 மாத குழந்தை பிறந்து உள்ளது. சகோதரர்களின் அம்மா வீட்டில் உள்ளதாகவும், இவர்கள் இருவரும் காஞ்சிபுரம் மண்டி தெருவில் வினோத் குமார் என்பவர் மெக்கானிக் கடை சொந்தமாக வைத்தும்,

அவரது தம்பி சதீஷ்குமார் டிங்கரிங் வேலை என இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இருவரும் அவ்வப்ப போது பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் இவர்கள் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டதை போன்று பேசிக்கொண்டும் உறவினர்களை வீட்டில் சேர்க்காமலும் அவர்களது தந்தையுடன் பேசாமலும் இருந்துள்ளார். சகோதரர்கள் அவர்களின் மனைவிகளை வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே பூட்டி வைத்திருந்ததாகவும், ஏதாவது பொருட்கள் வாங்க வேண்டி இருந்தால் அண்ணன், தம்பி இருவருமே ஒன்றாக வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வந்ததாகவும்,

இவர்கள் இருவரின் மனைவியையும் அக்கம் பக்கம் பேச அனுமதிக்காமல் இருந்து வந்துள்ளனர். உறவினர்கள் யாராவது போன் செய்தால் எனக்கு ஏன் போன் செய்கிறீர்கள், நான் இறந்தால் யாரும் வரக்கூடாது அதேபோன்று நீங்கள் இறந்தாலும் நான் வந்து பார்க்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே இருந்ததாகவும், இருவரின் மனைவிகளையும் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், இது சம்பந்தமாக உறவினர்கள் யாராவது கேட்க வந்தால் அவர்களை அசிங்கமாக திட்டியும் உள்ளார்கள். இதனால் உறவினர்கள் யாரும் இவரது வீட்டிற்கு வராமல் இருந்து வந்துள்ளனர்.

தன்னுடைய மனைவி ரூமில் குழந்தையை கவனித்துக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டின் கதவை தாழ் போட்டுவிட்டு அண்ணன், தம்பி இருவரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் இருவரும் வீட்டில் இருந்த இரண்டு மின் விசிறிகளில் தனித் தனியே தூக்கிட்டுக்கொண்டனர். இதை கண்டு வினோத் குமாரின் மனைவி சுகன்யா சத்தம் போடவே அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து கதவை உடைத்து பார்த்தனர். அதில் இருவரும் இறந்த நிலையில் இருந்ததால் காஞ்சி தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து சம்பவ இடம் சென்று விசாரித்து பிரேதத்தை காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Views: - 0

0

0