மருந்துகளை வாங்கி போதை மருந்தாக இளைஞர்களுக்கு விற்பனை: 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது…

Author: kavin kumar
22 August 2021, 4:31 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் மருந்துகளை வாங்கி போதை மருந்தாக இளைஞர்களுக்கு விற்பனை செய்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை ரோடு பகுதியில் கடந்த மாதம் 12தேதி
உறையூர், MAM அவென்யூ, சாலை ரோடு அந்த பகுதியை சேர்ந்த ஜோதிபாசு என்பவரது மகன்
சக்திதாசன், என்பவர் மனைவி ருத்ராதேவி பெயரில் ஸ்ரீ பார்மஸி என்ற மொத்த மருந்து
விநியோகம் செய்யும் உரிமம் எடுத்து அந்த உரிமத்தை வைத்து கள்ளத்தனமாக திருப்பூரில் உள்ள
மருந்து கடை மூலமாக உறையூர், வடிவேல் நகர் பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவரது மகன்
குமார், வரகனேரி பஜார், தெற்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் ராம்நாத் , கோடை இல்லத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவரது மகன் நந்தகுமார்,

உறையூர் நெசவாளர் காலனி நவாப் தோட்டத்தை சேர்ந்த செல்வகுமார் மகன் பாலாஜி, காந்தி அடுத்துள்ள சுண்ணாம்புகாரத் தெருவை ராஜேந்திரன் மகன் பிரகாஷ், உறையூர் வெக்காளியம்மன் கோவில் நகரை சேர்ந்த மாரிமுத்து நாடார் என்பவரது மகன் குமார் என்கிற குமரேசன் ஆகிய 6 பேரும் மேற்படி மருந்துகளை வாங்கி போதை மருந்தாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்தது தெரிய வந்தது.
எனவே, சக்திதாசன் உள்ளிட்ட எதிரிகள் ஏழு நபர்களையும் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சக்திதாசனின் மொத்த உரிம சான்றும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து ரூ.1,50,000/- சந்தை மதிப்புள்ள போதைக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகள்,

ஊசிகள், ரூ.50,000/- மதிப்புள்ள 5 கிலோ கஞ்சா, அவர்கள் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களும் 6 செல்போன்களும் கைப்பற்றப்பட்டு அவர்கள் திருச்சி நீதிமன்ற நீதிபதி முன் நேர் நிறுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட சக்திதாசன், குமார் மற்றும் ராம்நாத் ஆகிய மூவரும் தொடர்ந்து இதுபோன்று மருந்துகளை வாங்கி போதை மருந்தாக இளைஞர்களுக்கு விநியோகம் செய்யும் குற்றச்செயலில் ஈடுபடக் கூடியவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்படி 3 பேர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள கோட்டை
சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த பரிந்துரையின் பேரில் திருச்சி மாநகர காவல்
ஆணையர் அருண் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.
அதன்படி மேற்படி 3 பேரும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

Views: - 235

0

0