50 ஆயிரம் இலவச மரக்கன்றுகள்: மேட்டுப்பாளையம் வனச்சரகம் விவசாயிகளுக்கு அழைப்பு!!

9 July 2021, 6:47 pm
Quick Share

கோவை: மேட்டுப்பாளையம் வனவியல் விரிவாக்க மையத்தில் 50 ஆயிரம் நாற்றுக்கள் தயாராக உள்ள நிலையில், அவற்றை இலவசமாக பெற்றுச்செல்ல விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மரங்கிடங்கு மற்றும் நாற்றங்கால் பண்ணைகளில் மலைவேம்பு, தேக்கு, சிவப்பு சந்தனம், வில்வம், வாகை, நெல்லி,வேங்கை, நீர்மருது, கொய்யா உள்ளிட்ட நாற்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

தினமும் இதற்கு பணியாளர்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டு வனச்சரகர் பாஸ்கரன் தலைமையில் வளர்க்கப்பட்டு நன்றாக வளர்ந்துள்ளது. தற்போது மேட்டுப்பாளையம் வனவியல் விரிவாக்க மையத்தில் 50 ஆயிரம் நாற்றுக்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த நாற்றுக்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. அதற்கு விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தின் சிட்டா நகல், அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டும் எடுத்து வந்து வாங்கிக்கொள்ளலாம்.

இதுகுறித்து வனச்சரகர் பாஸ்கரன் கூறுகையில், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க தற்போது 50 ஆயிரம் நாற்றுக்கள் தயார் நிலையில் உள்ளது. விவசாயிகள் உரிய ஆவணங்களை கொடுத்து நாற்றுக்களை இலவசமாக பெற்றுச்செல்லலாம் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். விவசாயிகள் இது குறித்த விபரங்களுக்கு வனச்சரகரை 9787237131 என்ற எண்ணில் அழைத்து கேட்டுத்தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 137

0

0