கஞ்சா கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது… போலீசாருக்கு குவியும் பாராட்டு…
5 September 2020, 9:24 pmசென்னை: சென்னை புறநகர் பகுதிகளுக்கு ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி விற்பனை செய்யும்
கஞ்சா கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலை வழியாக ஆந்திராவில் இருந்து விக்னேஷ், அருண்பாண்டி, பாபு உள்ளிட்ட மூன்று பேர் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி வெங்காய மூட்டைக்கு அடியில் 451 கிலோ கஞ்சாவை சரக்கு வாகனத்தில் சென்னைக்கு கடத்தி வந்தனர். அப்போது வாகனை சோதனையில் ஈடுப்பட்டிருந்த செங்குன்றம் போலீசார் அவர்களையும், கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கஞ்சா கடத்தல் கும்பலில் தொடர்புடைய மேலும் சிலரை பிடிக்க தனிப்படை அமைத்து ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.
இந்நிலையில் கஞ்சா கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளான சிராஜுதீன், கார்த்திக் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நக்க பானு, பிரகாஷ், கண்டி கிருஷ்ணா, சரவணன் ஆகியோரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு கஞ்சா கடத்தல் கும்பலை கைது செய்த மாதவரம், செங்குன்றம் காவல்துறையினரை சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார்.
0
0