கும்மிடிப்பூண்டியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய விஜயகாந்த்…

24 March 2021, 10:32 pm
Quick Share

திருவள்ளூர்: உடல் நிலையையும் பொருட்படுத்தாத தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிரச்சாரத்தை முகக்கவசம் அணிந்தபடி கையை அசைத்தபடி கும்மிடிப்பூண்டியில் வேனின் இருந்தவாறு துவக்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி பேருந்து நிலையத்தில் வேனில் அமர்ந்தபடி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது முதற் கட்ட தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். கும்முடிப்பூண்டி தேமுதிக வேட்பாளர் கே.எம்.டில்லியை ஆதரித்து முரசு சின்னத்தில் பொன்னேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பொன் ராஜாவை ஆதரித்து பிரஷர் குக்கர் சின்னத்திற்கும் உடல் நிலை பொருட்படுத்தாமல் வாக்காளர்களிடம் வேனில் நின்றபடியும்,

கையை அசைத்தபடி வாக்கு சேகரித்து முக கவசம் அணிந்த படி வேனில் இருந்தவாறு வாக்கு கேட்டுவிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிளம்பிச் சென்றார். அவருக்கு கட்சியினர் அணிவிக்க வாங்கி வந்த ரோஜா மாலையை வாகனத்திற்கு அணிவித்து தொண்டர்கள் உற்சாகத்துடன் அவரை வழி அனுப்பி வைத்தனர். உடல்நலம் ஒத்துழைக்காத போதிலும் பொதுமக்களை சந்தித்து அவர் வாக்கு சேகரித்தது நீண்ட நாட்களுக்கு பிறகு அவரை பார்த்த ரசிகர்கள் கட்சித் தொண்டர்கள் பொதுமக்களையும் மகிழ்ச்சிகுள்ளாக்கினார்.

Views: - 10

0

0