காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து: காரில் பயணம் செய்த பெண் உயிரிழப்பு

21 July 2021, 7:29 pm
Quick Share

திண்டுக்கல்: ரெட்டியார்சத்திரம் அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் காரில் பயணம் செய்த பெண் உயிரிழந்தார். மேலும் இருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து அவரது மனைவி நிவேதா, அவர்களது மகள் ஜெயஸ்ரீ ஆகியோர் கோவையில் இருந்து திண்டுக்கல்லை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். காரை செல்லமுத்து ஓட்டி வந்துள்ளனர். இந்நிலையில் மதுரையில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை மதுரையை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள பாலராஜக்காபட்டி பாலம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரில் பயணம செய்த மூன்று பேருக்கும் பலத்த காயம் அடைந்தனர்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர்களை உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காரில் பயணம் செய்த நிவேதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவரும் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்து அருகே உள்ள பாலத்தின் பாதியில் இறங்கி நின்றது பேருந்தில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இவ்விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 119

0

0