இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து: காவல் உதவி ஆய்வாளர் பலி

30 November 2020, 6:21 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் புறவழிசாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செல்வராஜ். பணி நிமித்தமாக அரியலூர் நீதிமன்றத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அம்மாகுளம் அரியலூர் புறவழிசாலையில் ஏறும்போது பெண்ணாடம் நோக்கி சென்று சென்று கொண்டிருந்த மனோஜ்குமார் என்பவரின் கார் மோதி படுகாயமடைந்தார். பின்னர் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அரியலூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 14

0

0