இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து: சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியான சோகம்..!

Author: Udayaraman
1 August 2021, 10:31 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் அதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் ஜெயபிரகாஷ் பெருந்துறையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வேளாண்மை துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பர்கள் சவுந்தர்யன் மற்றும் திவாகரன் ஆகியோருடன் பெருந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பழையபாளையம் என்ற பகுதியில் கணபதி நகரில் இருந்து

இருசக்கர வாகனத்தில் வந்த காசிபாளையம் பகுதியை சேர்ந்த தறிப்பட்டறை தொழிலாளியான குப்புசாமி என்பவர் தனது நண்பர் தங்கம் என்பவர் சாலைய கடக்கும் போது ஜெயபிரகாஷ் ஓட்டிவந்த கார் மோதியது. இதில் குப்புசாமி மற்றும் தங்கம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரில் வந்த ஜெயபிரகாஷ் உட்பட மூவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் குப்புசாமி மற்றும் தங்கம் ஆகிய இருவரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 119

0

0