சுங்கச் சாவடியில் கார் கண்ணாடி உடைப்பு: சுங்கச்சாவடி ஊழியர் அத்துமீறல்

Author: Udayaraman
2 January 2021, 9:39 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் ஜார்ஜ். இவர், தனது குடும்பத்தாருடன் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில்,கட்டணம் செலுத்துவது தொடர்பாக, ஜார்ஜ்-க்கும், சுங்கச்சாவடி ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுங்கச்சாவடி ஊழியர், தடியால் தாக்கி கார் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜார்ஜ் காரை அங்கேயே நிறுத்திவிட்டு, சுங்கச்சாவடி அலுவலர்களிடம் முறையிட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுங்கச்சாவடி அலுவலர்கள் பாதிக்கப்பட்ட ஜார்ஜுக்கு, கார் கண்ணாடி மாற்றம் செய்வதற்காக ரூபாய் 2000 கொடுத்தனர். இதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது.

Views: - 38

0

0