பெரு விவசாயி ஒருவரின் கார் கடத்தல். கண்காணிப்பு கேமரா ஜிபிஆர்எஸ் புடேஜ் அளித்தும் காவல்துறை மெத்தனம்

29 November 2020, 5:16 pm
Quick Share

காஞ்சிபுரம் நகரை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் கிளார் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள மாருதி ஷிப்ட் விடிஐ என்ற சொகுசு காரை வாங்கி பயன்படுத்தி வருகிறார். காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே உள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பச்சையப்பன் அவர்களின் கார் கடந்த 17ம் தேதி விடிகாலையில் கடத்தப்பட்டது.

அங்குள்ள சிசிடிவி கேமராவில் பார்த்தபோது இரண்டு மர்ம நபர்கள் விடியற்காலை 2.15 மணி அளவில் பைக்கில் வந்து கார் கண்ணாடியை இறக்கி கள்ளச்சாவி போட்டு காரை எடுத்து செல்வது கண்டறியப்பட்டது. அந்த இரண்டு நபர்களில் ஒரு நபர் காரை ஓட்டிச் செல்வதும் மற்றொரு நபர் பைக்கை ஓட்டிச் செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு பச்சையப்பன் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பெற்றார். மேலும் அவர் வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவிலிருந்தும்,

கார் சென்ற பல திசைகளில் இருந்த கண்காணிப்பு கேமரா புட்டேஜ்களின் காட்சிகளையும் வாங்கி காவல்துறையுடன் சமர்ப்பித்துள்ளார். அதேபோல் அவருடைய காரில் ஜிபிஎஸ் கருவி வைக்கப்பட்டு இருந்தது . அதன் மூலம் கார் எந்த எந்த பகுதியில் சென்றது என்பதையும் சேகரித்து அதையும் காவல்துறையிடம் அளித்துள்ளார். இவ்வளவு ஆதாரங்களையும் விவசாயி பச்சையப்பன் சேகரித்து காவல்துறையினரும் அளித்தும் காவல்துறை எந்த விதமான நடவடிக்கையும் இந்த நாள் வரை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்களை அளித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த காவல்துறை தற்போது ஏன் இவ்வளவு மெத்தனப் போக்கை கடைபிடிக்கின்றன என விவசாய பெருமக்கள் குறைபட்டுக்கொண்டார்கள். இவர் அளித்த ஆதாரங்களை வைத்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் காரை எப்போதோ மீட்டுக் கொடுக்க முடியும். ஒரு விவசாயிக்கு செய்யக்கூடிய அடிப்படை கடமையை கூட காவல்துறை செய்யவில்லை என்பது சமூக ஆர்வலர்களே குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.

Views: - 0

0

0