சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீ விபத்து: அதிஷ்டவசமாக உயிர்தப்பிய 4 பேர்

24 September 2020, 6:57 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரன எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் காரில் இருந்த 4 பேர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.

மாயவரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது உறவினருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்று புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் உறவினரை அனுமதித்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர். ஜிம்பர் மருத்துவமனையில் இருந்து சிறிய தூரம் வந்த போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கண்ட ஓட்டுனர் சுதாரித்துக்கொண்டு காரில் இருந்த 3 பேரையும் உடனடியாக கீழே இறங்க அறிவுறுத்தினார். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். மேலும் விரைந்து வந்த தீயை கட்டுப்படித்திய வீரர்களுக்கு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். ஓட்டுனரின் செயல் காரணமாக தீ விபத்து அதிஷ்டவசமாக 4பேர் உயிர் தப்பினர். மேலும் தீ விபத்திற்கான காரணம் குறித்து தன்வந்திரி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 13

0

0